அரசியலில் இருந்து முற்றிலும் ஒதுங்கிய ரஜினி : நிர்வாகி வெளியிட்ட முக்கிய தகவல்!

6 February 2021, 4:27 pm
Rajini - Updatenews360
Quick Share

தமிழக சட்டமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த யாருக்கும் ஆதரவு அளிக்கமாட்டர் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அவரே முன்னர் அறிவித்திருந்தார். மேலும் தனது கட்சியின் பெயர் பற்றி கடந்த டிசம்பர் 31ஆம் தேதி முறையாக அறிவிப்பதாக தெரிவித்த நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

Image result for rajini

அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்த அவர் உடனே பெங்களூரு அப்பேல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் சிகிச்சை பெற்ற அவருக்கு மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் வீட்டில் ஓய்வு எடுத்தார். அதன் பின்னர் தனது அரசியல் நிலைப்பாட்டை வாபஸ் பெறுவதாகவும், என்னை மன்னித்துவிடுங்கள் என அறிக்கை வெளியிட்டார்.

Image result for rajini apollo

ஆனால் ரஜினி ரசிகர்கள் தனது தலைவர் மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் அவர் மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் அவரது ரசிகர்கள் சிலர் பல்வேறு அரசியல் கட்சிகளில் இணைந்தனர்.

இதை வரவேற்ற ரஜினி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தமது ரசிகர்கள் யார் வேண்டுமானாலும் எந்த கட்சியிலும் இணையலாம் என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் ரஜினியின் ஆதரவு எந்த கட்சிக்கு கிடைக்கும் என அரசியல் கட்சியினரிடையே எதிர்ப்பார்ப்பு எழுந்தன.

ஆனால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் ரஜினி வரமாட்டார் என்றும், யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டார் எனவும் ரஜினி மக்கள் மன்ற நிர்வகி சுதாகர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Image result for rajini apollo

இது குறித்து ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு தொலைபேசியில் பேசிய சுதாகர், நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா கட்சி தொடங்குவதாக வரும் தகவல் பொய் என்றும், அர்ஜுன மூர்த்தி கட்சி தொடங்கினால் ரஜினி மன்றத்திற்கு அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறியுள்ளார்.

அரசியலில் குதிக்காவிட்டாலும் ரஜினி நிச்சயம் ஏதாவது ஒரு அரசியல் கட்சிக்கு தனது ஆதரவை தருவார் என கூறி வந்த நிலையில், தற்போது வெளியான இந்த செய்தியால் அரசியல் கட்சிகளிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதே சமயம் அரசியலில் இருந்து ரஜினி முழுவதும் ஒதுங்கிவிட்டதாகவே கருதப்படுகிறது.

Views: - 0

0

0