சூப்பர் ஸ்டார் ரஜினியின் 47 ஆண்டுகள் திரைப்பயணம்… Common Cover Picture வெளியீடு… டிரெண்டிங்கில் #47YearsOfRajinismCCP!!

Author: Babu Lakshmanan
9 August 2022, 8:15 pm
Quick Share

எண்பதுகளில் மட்டுமே கிட்டத்தட்ட ஐம்பது திரைப்படங்களில் நடித்தார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த ஆக்‌ஷன், காதல், குடும்பம், நகைச்சுவை என தனது திரைப்படங்களில் பல அம்சங்களும் இருக்கும்படி பார்த்துக்கொண்டார்.

ரஜினியின் திரை வாழ்க்கையில் அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் மறக்க முடியாத மைல்கல் திரைப்படம் என்றால் அது பாட்ஷாதான். எத்தனையோ ஹிட் படங்கள் கொடுத்திருந்தாலும், பட்ஷாவிற்கு என்று தனி மரியாதை உண்டு.

அண்ணாமலை, எஜமான், உழைப்பாளி, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா என சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களை ரசிகர்களுக்குத் தந்தார். இத்தகைய தொடர் வெற்றித் திரைப்படங்களை தந்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் 2002-ம் ஆண்டு பாபா திரைப்படத்தின் வாயிலாக பெரும் சருக்கலை ரஜினிகாந்த் சந்தித்தார்.

அப்படியிருக்கையில்தான் சந்திரமுகி திரைப்படத்தின் மாபெரும் ஹிட். ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து திரையரங்குகளில் சந்திரமுகி வெற்றிகரமாக ஓடியது.

சந்திரமுகிக்குப் பிறகு, சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம்தான் சிவாஜி. இத்திரைப்படம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்திய திரையுலகமே இத்திரைப்படத்தை கொண்டாடியது. ஆனால், அடுத்து எந்திரன் படத்திலும் நடித்து அடுத்தடுத்து ஹிட் கொடுத்தார்.

எந்திரனுக்குப் பிறகு, ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்றார். அச்சமயத்தில், பலரும் ரஜினிகாந்தின் உடல்நிலை சரியாக வேண்டிக்கொண்டனர். பலர் கடவுள்களை வழிபட்டனர். பின்னர், மீண்டும் உடல்நிலை தேறிய ரஜினிகாந்த், மகள் இயக்கிய Motion Capture முறையிலான கோச்சடையான் படத்தில் நடித்தார்.

அதே ஆண்டு வெளிவந்த ரஜினிகாந்தின் மற்றொரு திரைப்படம்தான் லிங்கா. ஆனால், எதிர்பார்ப்பை லிங்கா திரைப்படம் பூர்த்தி செய்யாமல் போக, மீண்டும் ஒரு தோல்வி திரைப்படத்துக்கு சொந்தக்காரர் ஆனார் ரஜினிகாந்த். அதுமட்டுமல்லாமல், லிங்கா திரைப்படம் பல கேளிக்கைகளுக்கும் உள்ளானது. பட வெளியீட்டாளர்களும் ரஜினியை நெருக்கத் தொடங்கினர்.

அந்த சறுக்கல்களில் இருந்து வெளியே வர தர்பார், பேட்ட உள்ளிட்ட படங்கள் ஓரளவுக்கு கைகொடுத்தன. அண்ணாத்த வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் கதை என்று பார்க்கும் போது, கடும் விமர்சனத்திற்குள்ளாக்கியது.

இந்த நிலையில், தற்போது நெல்சன் திரைப்படத்தில் ஜெய்லர் படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. இந்தப் படத்திற்காக KS ரவிக்குமார் அவர்களும் திரைக்கதை எழுதுகிறார். கமலின் விக்ரம் படம் இண்டஸ்ட்ரி ஹிட் ஆகியுள்ளதால், பல ஆண்டுகளாக ஜென்யூன் ஹிட் இல்லாமல் இருக்கும் ரஜினிக்கு ஜெய்லர் படம் ஜெய்த்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடி உண்டாகியுள்ளது.

இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வந்தால் நடிகர் ரஜினிகாந்த், திரையுலகில் அறிமுகமாகி 47 ஆண்டுகள் ஆகிறது. இதனை கொண்டாடும் விதமாக, அவரது ரசிகர்கள் காமன் கவர் பிட்சரை வெளியிட்டுள்ளனர். அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Views: - 258

1

0