பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு : மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக தமிழக அரசு நடவடிக்கை..

Author: Babu Lakshmanan
28 June 2021, 3:14 pm
Perarivalan - updatenews360
Quick Share

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளளின் பரோல் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 6 பேர் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வருகின்றனர். அவர்களில் ஒருவரான பேரறிவாளன் உடல்நலத்தை காரணம் காட்டி ஒரு மாத பரோலில் கடந்த மே மாதம் 28ம் தேதி வெளியே வந்துள்ளார். அவரது வீட்டில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமும் காலை 10 மணிக்கு ஜோலார்பேட்டை காவல்நிலையத்திற்கு சென்று கையெழுத்திட்டு வருகிறார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வருகிறார்.

இதனிடையே, பேரறிவாளனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டால், அவரது உடலுக்கு நல்லது என மருத்துவர்கள் கூறியதால், மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்கக் கோரி, அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்தார்.

அவரது இந்தக் கோரிக்கையை ஏற்று, பேரறிவாளனின் பரோலை தமிழக அரசு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது.

Views: - 203

0

0