தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ் : 21 தியாகிகளுக்கு வீர வணக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2022, 9:27 am

பாமக நிறுவனர் ராமதாஸ் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதே போல வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயர்நீர்த்த தியாகிகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பெரியாரின் 144 ஆவது பிறந்த நாளை ஒட்டி விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார்.

தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ் : 21 தியாகிகளுக்கு வீர வணக்கம்!!

இதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் உள்ள வன்னியர் சங்க தலைமை அலுவலகத்தில் வன்னியர் சங்க இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த 21தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு வன்னியர் சங்க கொடியை ஏற்றினார்.

தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ் : 21 தியாகிகளுக்கு வீர வணக்கம்!!

இதை தொடர்ந்து 21 தியாகிகள் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தினர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!