சுற்றுலா வேன்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து… 2 பெண்கள் உடல்நசுங்கி பலி ; 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!
Author: Babu Lakshmanan13 January 2024, 2:30 pm
தனுஷ்கோடியில் சுற்றுலா வந்த இரு வேன்கள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலே வட மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பலி பலத்த காயம் அடைந்த பத்துக்கும் மேற்பட்டோரை அவசர சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றுள்ளனர்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் அருகே மத்திய பிரதேசத்தில் இருந்து சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு, சுற்றி பார்ப்பதற்காக ராமேஸ்வரத்தில் உள்ள வாடகை வேன் மூலம் தனுஷ்கோடி சென்றுள்ளனர்.
இந்த நிலையில், தனுஷ்கோடியில் கோதண்ட ராமர் கோவில் அருகே அரசு பேருந்தை வேன் முந்தி செல்ல முயன்றுள்ளது. பேருந்துக்கு முன் எதிரே வந்த மற்றொரு சுற்றுலா வேன் மீது வட மாநில சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் மேதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை அதிகாரிகள் விபத்தில் சிக்கிக் கொண்ட சுமார் 30க்கும் மேற்பட்டோரை மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி உள்ளனர். மேலும், இரண்டு பெண்கள் உயிருக்கு போராடிய நிலையில், தீவிர சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்து தனுஷ்கோடி போலீசார் விபத்து குறித்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த வடமாநில சுற்றுலா பயணிகள் விபத்துக்குள்ளாகி இருவர் உயிரிழந்த சம்பவம் தற்போது ராமேஸ்வரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0
0