பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியீடு!

Author: kavin kumar
25 August 2021, 6:17 pm
Quick Share

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர். அதனைதொடர்ந்து, நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான பணிகளைத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தொடங்கியது.அதன்படி பி.இ, பி.டெக். பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 24ம் தேதியுடன் நிறைவுபெற்ற நிலையில், மாணவர்களுக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்படுகிறது.

மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்திய ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 774 பேருக்கும் ரேண்டம் எண் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து செப்டம்பர் 4-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, செப்டம்பர் ஏழாம் தேதி முதல் அக்டோபர் நான்காம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறவுள்ளது. அக்டோபர் 20-ம் தேதிக்குள் கலந்தாய்வு முடிக்கப்பட்டு, மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் எனத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Views: - 171

0

0