எம்ஜிஆரிடம் வாய்ப்பு கேட்டு நடித்த ரங்கம்மாள் பாட்டி… கடைசி நிலையில் உதவ முன்வராத தமிழ் சினிமா : உறவினர்கள் கண்ணீர்…!!

Author: Udayachandran RadhaKrishnan
30 April 2022, 9:20 am
Rangammal Patti 1 -Updatenews360
Quick Share

கோவை : பழம்பெரும் குனச்சித்திர திரைப்பட நடிகை ரெங்கம்மாள் பாட்டி உடல்நலக்குறைவால் காலமான நிலையில் இன்று அவரது இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

50ஆண்டுகள் திரைத்துரையில் நடித்த மூத்த துனைநடிகை உடல்நலக்குறைவு ஏற்பட்டு திரைத்துறையினரிடம் உதவி கேட்டும் எவ்வித உதவியும் கிடைக்காமல் உயிரிழந்தார்

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள தெலுங்கு பாளையத்தை சேர்ந்தவர் ரங்கம்மாள் பாட்டி. தனது 30வயதில் கணவனை இழந்து சென்னைக்கு வேலை தேடி புறபட்டு சென்ற ரங்கம்மாள் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் வாய்ப்பு கேட்டு நடிக்க துவங்கினார்,

எம்.ஜி.ஆரின் விவசாயி திரைப்படத்தில் அறிமுகமாகிய ரங்கம்மாள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம் மற்றும் வடிவேல், விவேக் உள்ளிட்ட பல்வேறு முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ளார்

கடந்த 50ஆண்டுகளாக திரைத்துறையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 500க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார். ரங்கம்மாள் கடந்த 5மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் இருந்து சொந்த ஊரான அன்னூர் அருகே உள்ள தெலுங்கு பாளையத்திற்கு வந்தார்

மிகவும் உடல்நிலை பாதித்து இருந்த ரங்கம்மாள் குடியிருக்க ஒரு வீடு கூட இல்லாமல் வசித்து வந்தார். அது குறித்து ரெங்கம்மாள் தனது நிலையை திரைத்துறைக்கு பல கட்டமாக தெரிவித்தும் யாரும் உதவ முன்வரவில்லை.

இந்த நிலையில் நேற்று ரங்கம்மாள் பாட்டி உடல் நலக்குறைவால் காலமானார்.
திரைத்துறையில் 50ஆண்டுகள் ஜொலித்த ரங்கம்மாள் பல முறை அத்துறையின் உதவியை நாடியும் யாரும் உதவ முன்வராததால் உடல்நலத்திற்கு சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்துள்ளார்.

அவரது மறைவையொட்டி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 601

0

0