முதல் தாரத்திற்கு பிறந்த மூன்றரை வயது குழந்தை கொலை..! (வீடியோ)

15 February 2020, 4:57 pm
Walajapet Murder - updatenews360
Quick Share

ராணிப்பேட்டை : முதல் தாரத்திற்கு பிறந்த மூன்றரை வயது பெண் குழந்தையை அடித்தே கொன்ற தந்தை மற்றும் சித்தியை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். ஓட்டுனரான சங்கருக்கும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பிரியா என்பவருக்கும் இடையே கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைப்பெற்றது.

இவர்களுக்கு செளமியா என்ற 3 1/2 வயது மகள் உள்ளார். இந்த நிலையில் சங்கருக்கும் , பிரியாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் குழந்தை செளமியா தந்தை சங்கருடன் இருந்து வந்தார்.

இதனிடையே சங்கர் சந்தியா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் செளமியா உடலில் பல்வேறு இடங்களில் காயங்களுடன் வாலாஜாப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செளமியா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் காவல் துறையினர் மருத்துவமனைக்கு நேரில் வந்து சந்தியாவிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சந்தியா குழந்தை படிக்கட்டில் இருந்து தவறி விழுந்ததாக தெரிவித்தார் ஆனால் குழந்தையின் உடலில் ஏற்கனவே ஏற்ப்பட்ட காயங்கள் இருப்பதை கண்ட காவல் துறையில் சந்தேகத்தின் பெயரில் சந்தியாவை காவல் நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. சங்கர் தன்னுடைய மனைவி பிரியாவை பிரிந்த நாள் முதலே குழந்தை சௌமியாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார் இந்நிலையில் இரண்டாவதாக சந்தியா என்ற பெண்ணை திருமணம் செய்து பிறகு இருவரும் சேர்ந்து தினமும் குழந்தை சௌமியாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

மேலும் சௌமியா மற்ற குழந்தைகளைப் போல் இல்லாமல் தொடர் தாக்குதலால் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகி அமைதியான குணம் கொண்ட குழந்தையாக மனமாற்றம் அடைந்துள்ளார் மேலும் குழந்தை இரவு நேரங்களில் படுக்கையிலேயே சிறுநீர் மற்றும் மலம் கழித்து வந்ததாகவும் இதனால் தங்களுக்கு அதிகபடியாக குழந்தை மீது ஆத்திரம் ஏற்பட்டு சௌமியாவை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தது காவல்துறை விசாரணையில் குழந்தையின் தந்தை சங்கர் மற்றும் சித்தி சந்தியா ஆகியோர் தெரிவித்துள்ளனர் .

சம்பவ தினத்தன்று குழந்தையை சங்கரும் அவரது 8 மாத கர்ப்பிணியான மனைவி சந்தியாவும் குழந்தையை வேகமாக அடித்து கீழே தள்ளியதில் குழந்தை பலத்த காயம் அடைந்து அங்கேயே மயங்கி விழுந்து உள்ளது.

இதனை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு குழந்தை படிக்கட்டில் இருந்து கீழே விழுந்துவிட்டது என்று கூறி அனைவரையும் நம்ப வைக்க நாடக மாறியுள்ளனர் .ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தது அடுத்து காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில் உண்மைகள் அம்பலமாகின.

ஈவிரக்கமின்றி பெற்ற மகளை தன்னுடைய 8 மாத கர்பிணி சேர்ந்து குழந்தையை கடுமையாக தாக்கி கொலை செய்த சித்தி மீதும் காவேரிபாக்கம் காவல் துறையினர் இந்திய தண்டனை சட்டம் 375, 302 ,75JJ உள்ளிட்ட சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து வாலாஜாபேட்டை நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர்.