4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

Author: Udhayakumar Raman
1 December 2021, 7:08 pm
Quick Share

அரியலூர்: 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த 4 வயது சிறுமி தனது தனது தாயாருடன் வயலில் கடலை பறித்து கொண்டிருந்தார். அப்போது மணிகண்டன் தனது மகன்களுடன் 4 வயது சிறுமியை அழைத்துச் சென்று வீட்டில் விடுவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். மேலும், சிறுமிக்கு உணவு வாங்கி கொண்டு அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது தனது மகன்களை வெளியே செல்ல கூறி விட்டு வீட்டின் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு 4 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறவே அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் 4 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும்,அபாரதம் கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார். மேலும்,பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு 7 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Views: - 282

0

0