பைக்கை ஓரம் கட்டி ஓரினச்சேர்க்கை டார்ச்சர்! ‘Rapido‘வில் பயணம் செய்பவர்களே உஷார்!

2 November 2020, 6:37 pm
Rapido Homosex - Updatenews360
Quick Share

சென்னை : ரபிடோ டாக்சியில் பயணித்தவருக்கு ஓரினச்சேர்க்கை டார்ச்சர் கொடுத்த ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அயனாவரம் நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்த கேசவதன்ராஜ் என்ற 21 வயது இளைஞர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார். இவர் நேற்று முன்தினம் பெரம்பூரில் உள்ள நண்பரை பார்க்க சென்றார்.

பின்னர் வீட்டுக்கு திரும்ப ரபிடோ பைக் டாக்ஸியை புக் செய்து அதில் பயணித்து வந்ததுள்ளார். அப்போது பைக் ஓட்டுநர் இருசக்கர வாகனத்தை அயனாவரம் ரயில்வே குடியிருப்பு மைதானம் அருகே நிறுத்தி, கேசவதன்ராஜுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அதிர்ந்து போன அவர், உடனே சத்தம் போட்டுள்ளார், இதையடுத்து அவரிடமிருந்த ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடினார். இதையடுத்து காவல் நிலையத்திற்கு சென்று ரபிடோ ஓட்டுநர் மீது கேசவதன் ராஜ் புகார் அளித்தார்.

இதையடுத்து ரபிடோ ஒட்டுநரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் ராஜேஷ்குமார் என்பதும், பட்டதாரி படிப்பை முடித்து விட்டு ராஜமங்கலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிக்க வற்புறுத்தி பெண்ணின் இருசக்கர வாகனத்தை எரித்தது தொடர்பாக வழக்கு உள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ராஜேஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். ரபிடோ ஓட்டுநரால் ஏற்பட்ட இந்த சம்பவம் ரபிடோவில் பயணம் செய்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Views: - 44

0

0