அழிந்து வரும் அரிய வகை மக்னா யானை : மின்வேலியில் சிக்கி பரிதாப பலி.. விவசாயி தலைமறைவு!!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2021, 3:43 pm
Magna Elephant -Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே மின் வேலியில் சிக்கி மக்னா யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், விளாமுண்டி கடம்பூர்,தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், டி.என்.பாளையம், ஜுர்கள்ளி ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன.

இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை ஜுர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட ஓசூர் கிராமத்தில் விவசாயி ஜேம்ஸ் (வயது 65) உருளைக் கிழங்கு பயிரிட்டுள்ளார். காட்டு பன்றிகள் மற்றும் யானைகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற இரவு நேரத்தில் தோட்டத்தில் உயர் அழுத்த மின்சாரம் விட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு ஜீரகள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மக்னா யானை விவசாயி ஜேம்ஸ் விளை நிலத்தின் உள்ளே புகுந்த பொழுது மின் வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது தெரியவந்தது.

இதுபற்றி உடனே ஜுர்கள்ளி வனச்சரகர் ராமலிங்கத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர் சம்பவயிடத்திக்கு வந்த வனத்துறையினர் ஆய்வு செய்ததில் 30 வயதுமிக்க மக்னா யானை என்றும் உணவு தேடி வந்த போது மின் வேலியில் சிக்கி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். தப்போது விவசாயி தலைமறைவாகி உள்ளதாகவும் இதுபற்றி வனத்துறையினர் விசாரனை மேற்கொண்டுவருகின்றனர்

Views: - 343

0

0