பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்ட உடலை எலி கடித்த கொடுமை : அரசு மருத்துவமனையின் அவலம்!!

By: Udayachandran
1 October 2020, 4:15 pm
Rat Dead Body - updatenews360
Quick Share

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூரில் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்ட உடலை எலி கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அரசு மருத்துமனையில் நேற்று கட்டிட தொழிலாளி ஒருவர் மின்சார விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது உடலை இன்று பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க இருந்தனர்.

காலை பிரேத பரிசோதனை செய்ய உடலை எடுத்தபோது அந்த உடலில் மூக்கு கால் பகுதிகளில் எலி கடித்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து பிரேத பரிசோதனை செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் அரசு மருத்துவமனை நிர்வாகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துமனையில் குளிரூட்டப்பட்ட அறையில் வைக்கப் பட்ட இறந்தவரின் உடலில் எலி கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Views: - 44

0

0