அரிசி கடத்தலில் 19 வயது இளைஞர்கள்.!! 4 பேர் கைது.!!

15 July 2020, 9:26 am
Thirukovilur Ration Rice -Updatenews360
Quick Share

விழுப்புரம் : அரகண்டநல்லூர், அருகே மினி வேனில் கடத்த முயன்ற 30 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்த போலீசார், 19 வயது இளைஞர்கள் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக எஸ்பியின் தனிப்படைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று இரவு விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகிலுள்ள ஆலம்பாடி பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்திற்கிடமான மினிவேன் சென்றதை அரகண்டநல்லூர் தனிப்பிரிவு காவலர் செல்வகுமார் சோதனைக்கு நிறுத்த முற்பட்டுள்ளார்.

அப்போது வாகனத்தை நிறுத்தாமல் சென்ற மினிவேனை மடக்கி பிடித்து போலீசார் சோதனை செய்தனர். வாகனத்தில் 30 மூட்டைகளில் 810 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்திய வீரபாண்டியை சேர்ந்த அஜித்( வயது 19), திருவண்ணாமலை மாவட்டம் சடையனோடை பகுதியை சேர்ந்த சிலம்பரசன் ( வயது 35), முனியப்பன் (வயது 30) சாரதி (வயது 19) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.