ரேஷன் கடை ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக் : அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிரமம்? ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு!!

Author: Udayachandran RadhaKrishnan
7 June 2022, 10:33 am
Ration - Updatenews360
Quick Share

தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் சில முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ஜூன் 9 ஆம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில்,வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேசன் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி,”NO Work No Pay” என்பதன் அடிப்படையில் சம்பளத்தை பிடித்தம் செய்ய மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பதில் மாற்று ஏற்பாடு செய்து ரேசன் கடைகளை திறக்கவும் , மக்களுக்கு தடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Views: - 453

0

0