வரி கட்ட தயார்.. ஆனா விமர்சனங்களை நீக்குங்க : உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் கோரிக்கை!!!

Author: Udayachandran
27 July 2021, 11:57 am
Vijay Case -Updatenews360
Quick Share

சென்னை : காருக்கான நுழைவு வரி செலுத்த தயாராக உள்ளதாகவும் ஆனால் தன் மீதான விமர்சனத்தை நீக்க வேண்டும் என நடிகர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

இனதால் சொகுசு கார் இறக்குமதிக்கான நுழைவு வரியை ரத்து செய்ய கோரி வழக்க தொடர்ந்தார். இந்த வழக்கில் ஒரு நடிகர் வரியை எதிர்க்ககூடாது என்றும், பொது வாழ்வில் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் ரீல் ஹீரோவாக இருக்க கூடாது என கருத்து தெரிவித்து, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, அந்த பணத்தை கொரோனா நிதியாக வழங்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில் அபராதத்தை எதிர்த்து, நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தார். மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததாக என கடந்த வாரம் உயர்நீதிமன்றத்தில் வந்த போது, விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி கட்டுவதற்கு தயார் என்றும், அந்த உத்தரவை தாம் எதிர்க்கவில்லை என்றும் விளக்கமளித்தார்.

ஆனால் நீதிமன்றத்தை நாடியதற்காக விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதத்தையும் என் மீதான விமர்சனங்களை நீக்க வேண்டும் என்றும் நடிகர்களை கொச்சைப்படுத்தும் விதமாக நீதிபதியின் கருத்து உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் நுழைவு வரி வசூலிக்கக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவு அமலில் இருந்தததால் வழக்கு தொடர்ந்ததாக விஜய் விளக்கமளித்துள்ளார்.

Views: - 275

8

2