“மீண்டும் என்னை இருளுக்குள் இழுக்க முயற்சி” – வேதனைப்படுத்த வேண்டாம்: நடிகை பாவனா உருக்கம்..!

Author: Vignesh
27 September 2022, 9:30 am

நடிகை பாவனா, 5 வருடங்களுக்குப் பிறகு மலையாளத்தில் நடித்துவரும் படம் ‘என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு’. இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இதனிடையே, பாவனாவுக்கு சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் `கோல்டன் விசா’ வழங்கப்பட்டது. இந்த விழாவில், பாவனா அணிந்திருந்த உடை வலைதளங்களில் ட்ரோல் ஆக்கப்பட்டு வருகிறது.

ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு மலையாள சினிமாவுக்கு திரும்பியிருக்கும் அவர் மீது எழுந்த இந்த சைபர் தாக்குதலுக்கு பாவனா வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

“எனது அன்புக்குரியவர்கள் காயமடையாமல் இருக்கவும், ஒரு நாள் எல்லாம் சரியாகிவிடும் என்றும் நான் முயற்சித்து கொண்டிருக்கும்போது, ​​எதிர்மறையான கருத்துக்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் மூலம் என்னை மீண்டும் இருளுக்கு இழுக்க முயற்சிப்பவர்கள் இருப்பதை அறியும்போது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற செயல்கள் மூலம்தான் அவர்கள் சந்தோசம் காண விரும்பினால் நான் அவர்களைத் தடுக்கவில்லை” என்று பாவனா வேதனை தெரிவித்துள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?