கோவையில் களைகட்டிய RED LIGHT AREA… சத்தமே இல்லாமல் மசாஜ் சென்டரில் நடந்த சமாச்சாரம்.. அதிர்ச்சி தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2024, 1:18 pm

கோவையில் விபச்சாரத்திற்காக ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் அழகிகளை அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு இடையே விபச்சார கும்பல் தலைவன் சிக்கந்தர் பாஷா, அவருடைய கூட்டாளி ஸ்டீபன் ராஜ் ஆகியோரை கோவை மாநகர காவல் துறையினர் சமீபத்தில் கைது செய்தனர்.

அவர்களிடம் நடந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது. இவரிடம் மாமூல் பெற்ற நபர்கள் விபச்சார தொடர்பில் இருந்த நபர்கள் whatsapp மூலமாக போட்டோ அனுப்பி இளம் பெண்களுடன் ஹோட்டலில் தங்கிய பிரபலங்கள் குறித்து விசாரணை நடக்கிறது.

இது குறித்து கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் ஸ்டாலின் கூறும் போது : விபச்சார கும்பலை வழி நடத்திய சிக்கந்தர் பாஷா, அவரின் கூட்டாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிக்கந்தர் பாஷாவிடம் 16 செல்போன்கள் இருந்தன. அந்த செல்போன்களை அவரது கூட்டாளிகள் சிலர் பயன்படுத்துவதாக தெரிகிறது. காவல் துறைக்கு பயந்து அவர்கள் தலைமறை ஆகி விட்டார்கள்.

மேலும் படிக்க: இன்னும் 19 அமாவாசை தான்… திமுகவுக்கு தேதி குறிச்சாச்சு : சீறும் எடப்பாடி பழனிசாமி!!

பெங்களூர், மும்பை, ஹைதராபாத் உள்ளட்பட பல்வேறு நகரங்களில் இருந்து அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு இளம் அழகிகளின் போட்டோ விவரங்களை அனுப்பி வருவதாக தகவல் கிடைத்து உள்ளது.

விபச்சார கும்பலை சேர்ந்தவர்கள் கோவை நகருக்குள் வருவதில்லை. ஆனால் வெளிமாநிலத்தில் தங்கி விவரங்களை அனுப்பி ஆன்லைன் மூலம் பணம் வாங்கி இளம் பெண்களை ஓட்டலுக்கு அனுப்பி விபச்சார தொழில் செய்கின்றார்கள்.

இந்த கும்பல் நட்சத்திர அந்தஸ்து உள்ள ஹோட்டல்களை தான் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கும்பலில் 4 முதல் 6 பேர் இருக்கலாம். இவர்களை பிடிக்க காவல்துறை தீவிரம் காட்டி வருகின்றனர்.

நகரில் மசாஜ் சென்டர், ஸ்பா போன்றவற்றில் விபச்சாரம் செய்வதை தடுக்க காவல்துறை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் விபச்சாரத்தை தடுக்க தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு உள்ளது. சட்ட விரோதமாக நகரில் செயல்பட்ட 57 மசாஜ் சென்டர்கள் இதுவரை மூடப்பட்டு உள்ளது என்று கூறினார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?