ரெட் டாக்ஸி டிரைவர் கொலை வழக்கில் திருப்பம் : பல்வேறு கொலை, கொள்ளைகளில் ஈடுபட்ட தம்பதி கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
11 February 2022, 7:50 pm

கோவை : கோவையில் டாக்ஸி டிரைவர் கொலை வழக்கில் சென்னையில் வைத்து கணவன் மனைவி இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 9-ம் தேதி காலை வடவள்ளி காவல் நிலையம் ஒனம்பாளையம் பங்களா கிளப் அருகே ரெட் டாக்ஸி ஓட்டுனர் டாக்ஸி அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த சம்பம் குறித்து கோவை மாவட்ட எஸ்.பி செல்வநாகரதினம் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சென்னையை சேர்ந்த ஸ்டீபன் (வயது 45) கடந்த 8-ம் தேதி இரவு கடைசியாக கால் டாக்ஸி புக் செய்து பயணம் செய்ததும் அவருடைய மனைவி அமலோற்பவம் அவருடன் சென்றதும் தெரியவந்தது.

இந்த நிலையில் கணவனும் மனைவியும் சேர்ந்து கால் டாக்சி டிரைவரை கட்டையால் அடித்து விஷ ஊசி செலுத்தியும் கொலை செய்து விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது.

தொடர்ந்து அவர்கள் இருவரையும் சென்னையில் வைத்து தனிப்படையினர் கைது செய்து கோவை அழைத்து வந்தனர். அவர்களிடமிருந்து உருட்டுக்கட்டை, 20 -க்கும் மேற்பட்ட செல்போன்கள் லேப்டாப் உட்பட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஸ்டீபன் மீது 4 கொலை வழக்குகள், அவருடைய மனைவி அமலோற்பவம் மீது 2 கொலை வழக்குகள் உள்ளது. இவர்கள் கொள்ளை அடிக்கும் பொழுது விஷ ஊசி செலுத்தி கொலை செய்து கொள்ளை அடிப்பது வருவது வழக்கமாக இருந்துள்ளது.

துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை பிடித்த துணைக் காவல் கண்காணிப்பாளர் திருமால், இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் பாராட்டினார்

  • hans zimmer composing music for ramayana movie starring sai pallavi சாய் பல்லவி படத்தில் இணைந்த கிரிஸ்டோஃபர் நோலன் பட இசையமைப்பாளர்? வெளியான மாஸ் வீடியோ!