மருத்துவமனை ஊழியர்களை ஓட ஓட தாக்கிய கொரோனா நோயாளியின் உறவினர்கள் : பரபரப்பான காட்சி… 7 பேர் மீது வழக்குப்பதிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2021, 10:35 am
Attacked Hospital Staff - Updatenews360
Quick Share

கோவை : தனியார் மருத்துவமனை ஊழியர்களை தாக்கிய கொரோனா நோயாளி உறவினர்கள் 7 பேர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் ஆறுச்சாமி, கடந்த மாதம் 24 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, 4 நாட்களுக்கு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் 1 மாதத்திற்கு பின் நேற்று மீண்டும் மருத்துவமனைக்கு வந்த ஆறுசாமியின் உறவினர்கள், சிகிச்சை விபரம் மற்றும் கட்டணத்திற்கான பில் கொடுக்காத்தால் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அப்போது அங்கிருந்த மருத்துவரின் செல்போனை பிடிங்கிய உறவினர்கள் வெளியே வந்த போது நடுரோட்டில் மருத்துவமனை ஊழியர்களும் நோயாளியின் உறவினர்களும் மோதிக்கொண்டனர்,
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொரோனா நோயாளியின் உறவினர்கள் 7 பேர் மீது மருத்துவமனை மற்றும் மருத்துவ பணியாளர்களை தாக்குதல், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 290

0

0