ஓடி, ஓடி ஏழைகளுக்கு உதவி செய்வா.. RCB கூட்ட நெரிசலில் இறந்த இளம்பெண்ணின் உடலை பார்த்து கதறிய சொந்தங்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
5 June 2025, 2:35 pm

பெங்களூரு ஆர்.சி.பி வெற்றிக்கொண்டாட்டத்தில் திருப்பூர் உடுமலை மைவாடி பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி தாளாளர் மூர்த்தியின் மகளான மென்பொருள் பொறியாளர் காமாட்சி தேவி பலியானார்.

இதையும் படியுங்க: சிறை சென்றவனே தலைவன்… அன்புமணியை புறக்கணித்து பாமகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

அவரது உடல் திருப்பூர் மாவட்டம் உடுமலை மைவாடியில் உள்ள விவேகானந்தா பள்ளிக்கு இறுதி அஞ்சலி செலுத்த எடுத்து வரப்படுகிறது. மதியம் 2 மணி அளவில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சலிக்காக பள்ளியில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திரண்டு வருகிறார்கள். இளம் வயதில் இறந்ததாலும் திருமணம் ஆகாத மென்மையான மனம் படைத்தவர் என்பதாலும் காமாட்சி தேவியின் இழப்பு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

காமாட்சி தேவி மிகவும் மென்மையாக பழகக் கூடியவர் என்றும், ஏழைகளுக்கு கல்வி உதவி செய்யக்கூடிய குடும்பத்தில் பிறந்து மற்றவர்களுக்கு உதவும் குணம் படைத்தவர் என்றும், அவரது இறப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் அந்த பகுதி மக்களுக்கு பேரிழப்பு என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!