TNPSC தேர்வுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு…: புதிய அறிவுரைகள் வெளியீடு..!!

Author: Aarthi Sivakumar
24 September 2021, 9:21 am
tnpsc - updatenews360
Quick Share

சென்னை: TNPSC அரசு பணிக்கான தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கான விதிமுறைகளை மாற்றி அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு முதல் அரசுப்பணிகளுக்கான காலியிடங்களை நிரப்பும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில், இன்று டி.என்.பி.எஸ்.சி வாரியம் குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 போன்ற தேர்வுகளை பற்றிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

தேர்வு முறைகேடுகளை தடுக்க புதிய முறையில் விடைத்தாள்- டி.என்.பி.எஸ்.சி.  அறிவிப்பு || Tamil News TNPSC Announced new method answersheet

அதன்படி, முக்கிய அதிகாரிகள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கான புதிய அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை, பொதுத்தகுதி நிபந்தனை, வயது வரம்பு சலுகை மேலும், இட ஒதுக்கீடு, பாடத்திட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு அறிவுரைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

நடைமுறையில் இருந்து வரும் One Time Registration ஐந்து வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு விண்ணப்பத்தில் புகைப்படம், கையொப்பம் போன்றவை தெளிவாக இல்லை என்றால் அவை நிராகரிக்கப்படும். மேலும், பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் புதிய கட்டுப்பாடுகள் அமல் | Dinamalar Tamil News

மூன்றாம்‌ பாலின (பெண்கள்‌) விண்ணப்பதாரர்‌கள் பெண்களுக்கான 30% இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும்‌, அவர்கள்‌ மீதமுள்ள 70% காலிப்பணியிடங்களுக்கான இடஒதுக்கீட்டில்‌, ஆண்கள்‌ , மூன்றாம்‌ பாலினத்தவர்கள்‌ , மூன்றாம்‌ பாலின (ஆண்கள்‌) விண்ணப்பதாரருடன்‌ சேர்ந்து போட்டியிடத்‌ தகுதியானவர்கள்‌.
பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் போதுமான விண்ணப்பதாரர் இல்லாத பட்சத்தில் அந்த இடங்களில் ஆண்கள் மற்றும் மூன்றாம் பாலின (ஆண்கள்) நிரப்பப்படலாம் என்று அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 207

2

0