கோமியம் குடித்தால் சிறுநீரக பிரச்சனை வரும் : காமகோடிக்கு எதிராக மருத்துவர்கள் பரபர பேட்டி!!

Author: Udayachandran RadhaKrishnan
21 January 2025, 4:59 pm

சென்னை, பத்திரிகையாளர் மன்றத்தில், சென்னை IIT இயக்குநர் காமகோடி சர்ச்சையாக பேசியது தொடர்பாக அவரை கண்டிக்கும் வகையில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் செய்தியாளர்களை சந்தித்தனர்

இதில் பேசிய சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் இரவீந்திரநாத் :- சென்னை IIT-யின் தலைவர் காமகோடி பொதுசுகாதாரத்திர்க்கு எதிராக பேசி வருகிறார், பொறுப்பற்ற முறையில் அறிவியலுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

இதையும் படியுங்க: கல்லூரிக்கு போகும் போது கள்ளு குடித்துவிட்டுதான் போனேன் : கள் விடுதலை மாநாட்டில் சீமான் பேச்சு!

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் அவருடைய தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத போது கோமியம் கொடுத்து காய்ச்சல் சரியானதாகவும் கோமியத்தில் மருத்துவ குணம் உள்ளதாக தெரிவித்தார்.

Remove Kamakoti form IIT Says Doctors

அதேபோல அவர் பஞ்சகாவியத்தை பண்டிகை நாட்கள் உட்கொள்வோம் என தெரிவித்துள்ளார். இது மக்களுக்கு தவறான தகவல்களை பரப்புகிறது. இது போன்ற கருத்துக்களை மக்களிடம் சொல்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஒரு அறிவியல் தொழில்நுட்பத்தின் இயக்குனர் காய்ச்சல் மருந்துகள் பற்றியே தெரியாமல் பேசுவதற்கு பின் அரசியல் உள்ளது. பசுவை உயர்த்த பார்க்கிறார், அவருடைய கருத்துக்கள் அறிவியலுக்கு எதிரானது, எந்தவித அறிவியல் பூர்வ ஆதாரங்களும் இல்லை.

காய்ச்சல் வந்தால் மருத்துவரை அணுக வேண்டும்  , மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அவர் கூறியிருக்க வேண்டும். காய்ச்சலுக்கு மருந்துகள் நாடாமல் கோமியம் மட்டும் குடித்து கொண்டிருந்தால் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

எல்லா காய்ச்சலும் மோசமான காய்ச்சல்தான், ஒரு சில நாட்கள் காலதாமதமாக சிகிச்சைக்கு சென்றாலும் உயிரிழப்பு ஏற்படலாம்.

காய்ச்சலுக்கு அடிப்படை பற்றி தெரியாமல் மக்களிடம் கருத்தை தெரிவிக்கின்றார். ஐஐடியை பயன்படுத்திக் கொண்டு ஒரு அரசியல் செய்கிறார் ஒரு சித்தாந்தத்தை திணிக்கிறார். மக்களின் நலனுக்கும் எதிராக செயல்படும் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

பசுவின் கோமியம் மூலமாக பல்வேறு நோய்கள் ஏற்பட கூடும். கோமியம் குடிப்பதனால் சிறுநீரக நோய்கள் வர வாய்ப்புள்ளது , பசுவின்  சாணத்தின் மிகப்பெரிய கிருமி நாசினி என்று கூறுகிறார்.

ஆனால் அதனை உட்கொண்டால் மூளை சாவு , தீராத வலிப்பு ஆகிய நோய்கள் வரலாம்,பசும்பாலை காய்ச்சாமல் குடித்தாலே காசநோய் உள்ளிட்ட நோய்கள் வரக்கூடும்

நவீன அறிவியல் மிகப் பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது இந்த அடிப்படை கூட தெரியாமல், இப்படி பேசிவருகிறார் பசுவின் கோமியத்தை குடிப்பதனால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது மாறாக நோய்கள் தான் ஏற்படும், இதில் இந்துத்துவா அரசியல் உள்ளது

உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு நோய்கள் பசுவிற்கு வருகின்றன அவைகளின் கழிவுகளை உட்கொண்டல் அது மனிதருக்கும் பரவக்கூடும் என ஐ ஐ டி இயக்குனருக்கு தெரியாதா

ஏற்கனவே பிஜேபியின் நாடாளுமன்ற உறுப்பினர் மார்பக புற்றுநோயை கோமியத்தால் சரி செய்ததாக தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதற்கு மாறாக அவர் சிகிச்சை எடுத்து தான் குணமடைந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவ மறுத்துள்ளார்

2030க்குள் ஒரே தேசம் ஒரே மருத்துவமனை என்று கொண்டு வரப் பார்க்கிறார்கள் , பிற்போக்கான மருத்துவ தரவுகளை துறையில் திணிக்க வேண்டும் என மோடி  அரசு முடிவெடுத்துள்ளது , பாஜக ஆட்சிக்கு வரும் பொழுது போலி அரசியல் மற்றும் போலி மருத்துவம் மற்றும் அறிவியலுக்கு புறம்பானவைகளை திணித்து வருகின்றனர் 

கொரோனா விளக்கேற்றினால் சரியாகிவிடும் பசுஞ்சாணத்தை உடம்பில் பூசினால் சரியாகிடும் என்று பிஜேபியினர் கூறினார்கள். ஆனால் தடுப்பூசி வந்து தான் கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றியது

அவரது கருத்துக்கு தமிழ்நாடு மக்களுக்கும் சுகாதாரத் துறைக்கு எதிரானது அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். உத்தரபிரதேச அமைச்சர் ஒருவர் பசு மாட்டு கொட்டகையை சுத்தம் செய்தால் கேன்சர் நோய் வராது என தெரிவித்துள்ளார்.

இது மக்களை ஏமாற்றும் செயல். ஆளுநர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமிக்கும் விஷயத்தில் தொடர்ந்து தலையிட்டு வருவதாகவும் அது மாநில அரசின் உரிமையை பறிப்பது ஆகும்.

பசுமாட்டு கோமியத்தை ஆராய்ச்சி செய்யும் நிறுவனங்கள் எருமை மாட்டின்  கோமியம் மற்றும் கழிவை ஏன் ஆராய்ச்சி செய்யவில்லை , ஐ ஐ டியில் பஞ்சகள்வியத்தை மாணவர்களுக்கு தினமும் கொடுத்தால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா ??

மருத்துவர் சாந்தி செய்தியாளர் சந்திப்பு

அறிவியலுக்கு போராட வேண்டிய நிலைக்கு பாஜக ஆட்சி நம்மை தள்ளியுள்ளது. இந்தியாவில் இப்போது இருக்கம் சட்டங்களில் பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பை ஒப்பிடுகையில் பசுக்களுக்கு அதிகளவில் பாதுகாப்பு உள்ளது நவீன மருத்துவம் மிகவும் வேகத்துடன் வளர்ந்து மக்களை காப்பாற்றும் பணியில் இருக்கிறது 

இந்தியாவில் கலாச்சாரத்தில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது என ஆதி கால மருத்துவத்தை நாவின கால மருத்துவத்துடன் இணைக்கிறது ஹிந்துத்துவா அரசு என தெரிவித்தார்

  • savukku shankar said that red giant movies company plan to flop jana nayagan movie ஜனநாயகன் படத்தின் சோலியை முடிக்க ரெட் ஜெயண்ட் போட்ட பக்கா  பிளான்? பிரபலம் ஓபன் டாக்…