வாடகை ஹெலிகாப்டர் சேவை கோவையில் அறிமுகம்..! 30 நிமிட வாடகை எவ்வளவு தெரியுமா..?

8 September 2020, 12:38 pm
cbe helicopter - - updatenews360
Quick Share

கோவை : வாடகை கார்களை போலவே கோவையில் வாடகை ஹெலிகாப்டர் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் என்.ஜி.ஜி.ஓ காலனி கங்கா ஹெலிபேட் சர்வீஸ் மையத்தில் கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ஹாலிடேஸ் பிளானட் எக்ஸ் இணைந்து இன்று ஹெலிகாப்டர் வாடகை சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒருவரின் சொந்த திட்டத்திற்கான தனியார் ஹெலிகாப்டரை கோவையில் அரைமணி நேரம் முதல் அவர்களின் தேவைக்கேற்ப வாடகைக்கு எடுக்க முடியும்.

திருமண புகைப்படம் எடுப்பது, மலர் பொழிவு, பிறந்தநாள் கொண்டாட்டங்கள், திருமணநாள் கொண்டாட்டங்கள், ஓய்வு பயணங்கள், நகர சுற்றுப்பயணம், மருத்துவ அவசரநிலை போன்ற பல்வேறு திட்டங்களுக்காக தனியார் ஹெலிகாப்டர் சேவையை பயன்படுத்தலாம். இதன் முதல் நிலையாக கோவை மக்களுக்காக நகர சுற்றுப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் என மக்கள் ஹெலிகாப்டரில் நகர சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம். ஹெலிகாப்டரின் இருக்கை திறன் ஐந்து பயணிகள் மற்றும் ஒரு பைலட் கொண்டதாகும்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் அனைவரும் பாதுகாப்பான பயணத்தை விரும்பும் நிலையில், ஹெலிகாப்டர் பயணம் பாதுகாப்பானதாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்த ஹெலிகாப்டரில் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் எனவும், அரசு அனுமதி உடன் இயங்கி வருவதாகவும் தெரிவித்த அவர்கள், 30 நிமிடங்களுக்கு கட்டணமாக ரூ.20,000 வசூலிப்பதாக தெரிவித்தனர்

Views: - 27

2

0