மீண்டும் திறக்கப்பட்ட கோயம்பேடு மார்க்கெட்: 60 பேருக்கு கொரோனா பாதிப்பு…!!

Author: Aarthi
13 October 2020, 5:26 pm
koyanbed 1 - updatenews360
Quick Share

சென்னை: கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டதில் இருந்து கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டது. பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கோயம்பேடு மார்க்கெட் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் கடந்த 28ம் தேதி கோயம்பேடு சந்தை மீண்டும் திறக்கப்பட்டது.

அங்கு வரும் அனைவருக்கும் நுழைவு வாயிலிலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த 16 நாட்களில் மட்டும் 4,200 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 62 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, பேசிய காய்கறி வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகர் கோயம்பேடு சந்தை, மீண்டும் கொரோனாவின் மையமாக உருவாகி வருவதாக வெளியாகும் தகவல் முற்றிலும் தவறானது என மறுப்பு தெரிவித்துள்ளார்.

Views: - 52

0

0