சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை : குழந்தையை மீட்ட காவல்துறையினர்

Author: kavin kumar
24 January 2022, 1:27 pm

திருச்சி : திருச்சி அருகே அருகே பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை, சாலையோரம் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை அருகே உள்ள குடில் பகுதியில் நேற்று இரவு அவ்வழியே சென்ற பொதுமக்கள் குழந்தையின் அழுகுரல் கேட்டு அருகில் சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக பெட்டவாய்த்தலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையை பத்திரமாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குழந்தையை இங்கு வீசி சென்றவர் யார்? தவறான உறவில் பிறந்ததாக அல்லது குழந்தையை வளர்ப்பதற்கு வறுமையின் காரணமாக வீசிவிட்டு சென்றனரா என பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்த சில மணி நேரத்தில் குழந்தை
வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

  • after retro flops Pooja Hegde Unlucky Actress பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?