பெண் கைதி சடலமாக மீட்பு… புழல் சிறையில் அதிர்ச்சி சம்பவம் : போலீசார் விசாரணையில் ஷாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 October 2023, 5:43 pm

பெண் கைதி சடலமாக மீட்பு… புழல் சிறையில் அதிர்ச்சி சம்பவம் : போலீசார் விசாரணையில் ஷாக்!!

சென்னை புழல் பெண்கள் சிறையில் கொலை கொள்ளை
உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு மகளிர்சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறை கைதி மீனாட்சி என்கிற காந்திமதி 50 தற்கொலை செய்துள்ளார்.

இலவச சட்ட உதவி மையம் மூலம் ஜாமீன் கிடைத்தும், உறவினர்கள் யாரும் உறுதி பத்திரம் எழுதி தர வராததால் அவர் மன உளைச்சலில் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2014ம் ஆண்டு சென்னை வேளச்சேரியில் தான் வேலை செய்த வீட்டின் உரிமையாளர் லட்சுமி தேவியை கட்டி போட்டுவிட்டு 12 சவரன் நகை, 45 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற வழக்கிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி ஜீயபுரத்தில் மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளை அடித்த வழக்கில் காந்திமதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த காந்திமதி குளியல் அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து புழல் போலீசார் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?