வீட்டுக்குள் இருந்து வீசிய துர்நாற்றம்… கதவை திறந்த போலீசாருக்கு காத்திருந்த ஷாக் : இளைஞர் சடலம் மீட்பு!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2024, 12:52 pm

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 34 வயது இளைஞர் மணிகண்டன் என்பவர், கோவை உப்பிலிபாளையம், சென்னிமலை கவுண்டர் லே- அவுட் பகுதியில் தனியாக வாடகைக்கு வீடெடுத்து தங்கி பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்து உள்ளார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தால் வீட்டின் உரிமையாளருக்கு சந்தேகம் எழுந்ததால் கோவை, சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து உள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டை திறந்து பார்த்ததில் இறந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் லேசாக அழுகிய நிலையில் மணிகண்டன் சடலமாக கிடந்து உள்ளார்.

மேலும் விசாரணையில் , மணிகண்டன் கடந்த சில மாதங்களாகவே யாருடனும், பேசாமலும், உணவு அருந்த மட்டுமே வீட்டை விட்டு வெளியே வருவதுமாக இருந்து உள்ளதாகவும், தெரியவந்தது.

மேலும் மணிகண்டன் எழுதிய கடிதமும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் நான் மிகவும் மன அழுத்தத்துடன் இருப்பதால் தற்கொலை செய்வதாக அதில் மணிகண்டன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தார்.

மேலும் பங்கு சந்தை வர்த்தகத்தில் எற்பட்ட நஷ்டம் ஏற்பட்டு இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது வேறுயேதேனும் காரணமா ? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?