‘குடிபோதையில் ரகளை.. காதை கிழிக்கும் சாங் வால்யூம்’ : நடிகர் விஷ்ணு விஷால் மீது போலீசில் புகார்

23 January 2021, 5:16 pm
Quick Share

சென்னை : குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக நடிகர் விஷ்ணு விஷால் மீது அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடிகர் விஷ்ணு விஷால் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்த நிலையில், அவர் நள்ளிரவு நேரங்களில் குடித்து விட்டு, குடிபோதையில் ரகளையில் ஈடுபடுவதாக காவல்துறை கூடுதல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகார் மனுவில், நடிகர் விஷ்ணு விஷால் வீட்டில் அதிகளவு சத்தம் வந்ததாகவும், இது பற்றி கேட்டதற்கு தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், முதியவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் என பலர் இருக்கும் இந்தக் குடியிருப்பில் நடிகர் விஷ்ணு விஷாலின் நடவடிக்கைகள் தொந்தரவு ஏற்படுத்துவதாகவும், நள்ளிரவில் அடிக்கடி அடையாளம் தெரியாத நபர்கள் வந்து செல்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, போலீசார் சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்து, நடிகர் விஷ்ணு விஷாலிடம் நேரில் விசாரணை நடத்தினர்.

Views: - 0

0

0