ஓய்வு பெற்ற ஜிப்மர் ஊழியர் படுகொலை : புதுச்சேரியில் அதிர்ச்சி!!

By: Udayachandran
11 October 2020, 12:35 pm
Pondy Murder - Updatenews360
Quick Share

புதுச்சேரி : வீட்டு மாடியில் தூங்கிக்கொண்டிருந்த ஓய்வு பெற்ற ஜிப்மர் ஊழியரை மர்ம நபர்கள் கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அரியாங்குப்பம் காக்காயன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமண்ணன் (76), ஓய்வு பெற்ற ஜிப்மர் ஊழியரான இவருக்கு 2 மகள்கள் 1 மகன் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் வசித்து வருகின்றனர், சுப்பிரமணியன் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

தினமும் காலையில் சுப்பிரமணியனின் மருமகன் பழனி அவருக்கு சிற்றுண்டி எடுத்து வருவது வழக்கம் இந்நிலையில் இன்று காலை பழனி சிற்றுண்டி எடுத்து சென்றுள்ளார் அப்போது வெகு நேரமாக கதவை தட்டியிம் கதவு திறக்கப்படாத்தால் அக்கம்பக்கத்தினர் உடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் மாடியில் சுப்ரமணியன் கழுத்து அறுக்கபட்ட நிலையில் கொலை செய்யபட்டிருந்தார்,

இது குறித்து பழனி அரியாங்குப்பம் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலை அடுத்து அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இக்கொலை சம்பவம் குறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர், முதியவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலையான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது..

Views: - 42

0

0