திமுகவில் இணைந்தார் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்கே கிருஷ்ணன்..!!!

12 January 2021, 4:47 pm
dmk retired justice - updatenews360
Quick Share

சென்னை : சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கே. கிருஷ்ணன் திமுகவில் இணைந்தார்.

இது தொடர்பாக நேற்று திமுக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று (11.1.2021) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் திமுகவில் இணைந்தார்.

updatenews poll updatenews360

அப்போது பொதுச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் க.பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி, தலைமைக் கழக சட்ட ஆலோசகர் என்.ஆர்.இளங்கோ, சட்டதிட்டத் திருத்தக் குழுச் செயலாளர் பி.வில்சன், வழக்கறிஞர் விக்டர் ஆகியோர் உடனிருந்தனர், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 10

0

0