பிளஸ் 1 மாணவர்களுக்கான மறுமதிப்பீடு, மறுக்கூட்டல் : இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!
31 August 2020, 9:50 amதமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதிய பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பள்ளி மாணவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களில் சந்தேகம் இருந்தால் மறுமதிப்பீடூ மற்றும் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்க வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இன்று முதல் தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்கள் மறுமதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி முதல் விடைத்தாள் நகல் இணையத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. விடைத்தாள் நகலை சரிபார்த்த பின் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் இன்று முதல் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள் நகரை பதிவிறக்கம் செய்து பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அருகில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலகங்களில் செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விண்ணப்பத்திற்கான கட்டணம் மறுமதிப்பீட்டுக்கு ரூ.505 மற்றும் மறுக்கூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு ரூ.305 மற்ற பாடங்களுக்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.
0
0