துணை தாசில்தாரின் பணி இடைநீக்கத்துக்கு கண்டனம்: கோவையில் வருவாய்த்துறை ஊழியர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்..!!

Author: Rajesh
25 February 2022, 2:04 pm
Quick Share

கோவை: கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் துணை தாசில்தார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் துணை தாசில்தார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கோவை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு வருவாய்த் துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் சேகர், செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். அப்போது அவர்கள் கூறுகையில்,

” கோவை வடக்கு தாலுக்கா அலுவலகத்தில் பணிபுரியும் துணை தாசில்தார் எந்தவித முகாந்திரமும் இன்றி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிறு, சிறு பிரச்சினைகளுக்கு கூட வருவாய் துறை ஊழியர்களுக்கு மெமோ கொடுக்கப்பட்டு வருகிறது. அரசு விருந்தினர் மாளிகைகளில் முக்கிய பிரமுகர் வருகையில் ஏற்படும் செலவை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
துணை தாசில்தார் மீது பிறப்பிக்கப்பட்ட தற்காலிக பணிநீக்க உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். ஊழியர்களின் திடீர் போராட்டத்தால் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்கள், வருவாய்த்துறை அலுவலகங்களில் நடைபெறும் பணிகள் பாதிக்கப்பட்டன.

Views: - 616

0

0