ஆதரவில்லாதவர்களுக்கு கிடைத்த தாயுமானவன்.! மனிதம் போற்றும் அரசு அதிகாரி.!!

27 June 2020, 6:26 pm
Beggar Man Corona Dead - Updatenews360
Quick Share

திருவள்ளூர் : பொன்னேரியில் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்த 70 வயது முதியவர் கொரோனாவால் உணவு கிடைக்காமல் உயிரிழந்த நிலையில் சடலத்தை நான்கு மணி நேரத்திற்குப் பின்னர் காவல்துறையினர் சமூக ஆர்வலர்கள் உதவியுடன் வருவாய்த்துறையினர் நல்லடக்கம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் கடந்த ஓராண்டு காலமாக தங்கி பிச்சை எடுத்து வந்த நிலையில் உணவின்றி தவித்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த முதியவரின் சடலத்தை நான்கு மணி நேரத்திற்குப் பின்னர் பொன்னேரி வருவாய் ஆய்வாளர் பன்னீர்செல்வம் காவல்துறையினர் தன்னார்வலர்கள் உதவியுடன் பொன்னேரி ஆரணி ஆற்றங்கரையில் அமைந்த இடுகாட்டில் நல்லடக்கம் செய்தனர்.

ரயில் நிலையம் பேருந்து நிலையம் கோவில்களில் பிச்சை எடுத்து வந்தவர்கள், பார்வையற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவருக்கும் தனது சொந்த செலவில் பொன்னேரி வருவாய் ஆய்வாளர் பன்னீர்செல்வம் இரவு பகல் என மூன்று வேளையும் தேடிச்சென்று உணவு அளித்து வந்த நிலையில் இந்த முதியவர் உணவு சாப்பிடாமல் பட்டினி கிடந்தவர் தற்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இழந்த இவரது உடலை உரியமுறையில் உடற்கூறு ஆய்வு கூட செய்யாமல் அப்படியே எடுத்துச் சென்று ஆரணி ஆற்றின் கரையில் உள்ள இடுகாட்டில் சமூக ஆர்வலர்கள் உதவியுடன் காவல்துறையினர் நல்லடக்கம் செய்தனர்