மீண்டும் உச்சத்தை தொடும் தக்காளி விலை: மற்ற காய்கறிகளும் வரலாறு காணாத விலை உயர்வு..!!

Author: Aarthi Sivakumar
8 December 2021, 9:20 am
Quick Share

சென்னை: கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி, சில்லரை வியாபாரத்தில் ரூ.130க்கு விற்பனை செய்யப்படுவது இல்லத்தரசிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது. அதேபோல் வடகிழக்கு பருவமழை காரணமாக கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் கனமழை பெய்தது. இதனால் வரத்து குறைந்து, காய்கறி விலை அதிகரித்தது.

விழுப்புரத்தில் காய்கறி விலை பன்மடங்கு உயர்வு- Dinamani

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்தது. இதனால் தக்காளி விலை அதிகரித்துக் கொண்டே வந்தது.

ஒரு கிலோ தக்காளி கோயம்பேடு மார்க்கெட்டிலேயே 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. அதன்பின் சற்று விலை குறைய ஆரம்பித்தது. இந்நிலையில் இன்று காலை கோயம்பேட்டில் தக்காளி சில்லரை விலையில் 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வீடு தேடி வரும் காய்கனிகள்.. தகவல்களை அறிய தொலைபேசி எண்  அறிவிப்பு! | The Chennai Corporation has informed vegetables will be  distributed to homes in Chennai from tomorrow ...

இதனால் மீண்டும் இல்லத்தரசிகள் தக்காளி இல்லாமல் சமைக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். தக்காளி மட்டுமல்லாது மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.

Views: - 189

0

1