உயரும் மதுபான விலை.. குவாட்டர், பீர் விலை தெரியுமா? டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
29 January 2024, 9:50 pm

உயரும் மதுபான விலை.. குவாட்டர், பீர் விலை தெரியுமா? டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!

மதுபான விலை உயர்த்தப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு மதுப்பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது 01.02.2024 தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.

எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10/- உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20/- உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10/- உயர்த்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட விலை உயர்வின் அடிப்படையில் 375 மி.லி., 750 மி.லி., 1000 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் மதுபான ரகங்களும் மற்றும் 325 மி.லி., 500 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளும் அந்தந்த ரகத்திற்கும் மற்றும் கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!