சினிமா படப்பிடிப்புக்கு 100 பேர் வரை பயன்படுத்த அனுமதி கோரிக்கை : ஆர்.கே. செல்வமணி பேட்டி!!

7 September 2020, 2:03 pm
rkselvamani-updatenews360
Quick Share

சென்னை : சினிமா படபிடிப்பு நடத்த அனுமதி கொடுத்த 75 பேரை 100 பேராக உயர்த்த வேண்டும் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தாக ஃபெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தனர். பின்னர், ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களிடம் பேசியதாவது :- சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்த காரணத்திற்காக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பாக முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம்.

மேலும் படப்பிடிப்பு நடத்த 75 பேர் வரை அனுமதிக்கப்பட்டு உள்ளதை 100 பேராக அதிகரிக்க வேண்டும். திடீரென அனுமதி வழங்கியதால் சிறிய படங்கள் மட்டுமே தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. தற்போது 60 படங்கள் பாதியில் நிற்கிறது. ஆகையால் 100 பேராக அனுமதித்தால் மட்டுமே அனைத்து படங்களும் படப்பிடிப்பை துவங்கும்.

ஓடீடீயில் புதிய திரைப்படங்கள் வெளியீடுவது யாருக்கும் பாதிப்பு இல்லாம் வெளியே வர வேண்டும், திரையரங்கம், தயாரிப்பாளர்கள் இருவரும் பாதிக்காத வகையில் ஓடீடீ விஞ்ஞானத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், எனத் தெரிவித்தார்.

Views: - 9

0

0