ஓபிஎஸ்-ன் பண்ணை வீட்டில் கொள்ளை : ஓய்வெடுக்கும் அறையில் இருந்த பீரோவை துளையிட்டு மர்மநபர்கள் கைவரிசை.. போலீஸ் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
15 October 2022, 3:50 pm

ஓபிஎஸ் பண்ணை வீட்டின் கதவை உடைத்து டிவியை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள். பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு உள்ளது.

இந்தப் பண்ணை வீட்டில் கீழ் உள்ள இரண்டு அறைகளில் ஒன்று பார்வையாளர்களை சந்திப்பதற்கும் மற்றொன்று ஓபிஎஸ் முக்கிய நபர்களை சந்திப்பதற்குமான இரண்டு அறைகள் உள்ளது. மேலும் அந்த வீட்டின் மாடியில் ஓபிஎஸ் ஓய்வு பெறுவதற்கான அரை என தனியாக உள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு ஓபிஎஸ்யின் பண்ணை வீட்டில் பின்புறம் உள்ள சுவரின் வழியாக ஏறி குதித்த கொள்ளையர்கள் ஓபிஎஸ் ஓய்வு எடுக்கும் மேல் மாடியில் உள்ள அறையின் கதவை உடைத்து அந்த அறையில் இருந்த பீரோவை உடைத்து பார்த்ததில் நகை மற்றும் பணம், பொருள் உள்ளிட்டவைகள் ஏதும் இல்லாத நிலையில் 54 இன்ச் டிவியை மற்றும் கொள்ளையர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

இன்று காலையில் வழக்கம் போல பாதுகாவலர்கள் சென்ற போது மேல் மாடியில் அரை உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து பெரியகுளம் தென்கரை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்களைக் கொண்டு சம்பவ இடத்தை ஆய்வு செய்து முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் ஓபிஎஸ் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்த பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீதா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் பண்ணை வீட்டின் கதவை உடைத்து டிவியை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!