என்னை North Indian-னு பாரதிராஜா 7 தடவை Reject பண்ணிருக்கார் – மனம் திறந்த ரோஜா சீரியல் நடிகர்..!

Author: Vignesh
26 September 2022, 10:48 am

தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கியிலிருந்து சீரியல்கள் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள். நடிகைகளும் வகையில் 90களில் இருந்து சின்னத்திரை சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் தேவ் ஆனந்த்.

இவர் சின்னத்திரை சீரியல்களில் மட்டும் இல்லாமல் வெள்ளித்திரை படங்களிலும் நடித்திருக்கிறார். சின்னத்திரையில் வில்லன், ஹீரோ, குணச்சித்திரம் என பல ரோலில் தேவ் ஆனந்த் நடித்திருக்கிறார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் என்ற தொடரிலும், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா என்ற தொடரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் பிரபல பத்திரிக்கைக்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய திரை பயணம் குறித்து கூறியிருந்தது, நான் நார்த் இந்தியனாக இருந்தாலும் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். எங்கள் குடும்பத்தில் யாருமே மீடியாவை சேர்ந்தவர்கள் இல்லை. என்னுடைய அப்பாவுக்கு சினிமாவில் பலரை தெரியும். அதோடு என்னுடைய அப்பாவிற்கு எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா, கலைஞர் என்று பெரிய தலைவர்களை எல்லாம் நன்றாக தெரியும்.

அதனால் சினிமாவில் முயற்சி செய்யலாம் என்று தான் இந்த துறையை தேர்வு செய்தேன். அதுமட்டும் இல்லாமல் நான் சின்ன வயதிலேயே இருக்கும்போது செத்த பிறகும் நம்மை பார்க்க மக்கள் கூட்டம் வரனும் என்று ஆசைப்பட்டேன். அதற்கு என்ன செய்யணும் என்று தான் யோசித்து அரசியல் இல்லைனா சினிமா என்று முடிவெடுத்தேன்.

பின் நான் மீடியாவை தேர்ந்தெடுத்தேன். என்னுடைய அப்பா இரண்டு வருடம் எனக்கு டைம் கொடுத்தார். அதுக்குள் மீடியாவில் நடிக்க ஆரம்பித்து விடனும் இல்லையென்றால் என்னுடைய பிசினஸை கவனிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். சரி என்று நானும் மீடியாவில் முயற்சி செய்தேன். ஆரம்பத்தில் எனக்கு கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டிருந்தேன். தாஜ்மஹால் படத்துக்காக ஆடிஷன் போனேன். என் பெயர் சொல்லவும் பாரதிராஜா சார் வடநாட்டு பையனா என்று கேட்டார். ஆமாம், என்று சொல்லவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

சினிமா பட வாய்ப்பு:

தொடர்ந்து ஐந்து முறை இதே ஆடிஷனுக்கு போய் ரிஜெக்ட் ஆனேன். பின் பிரண்டு மூலமாக தான் எனக்கு ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது பாரதிராஜா சார் என்னை பார்த்த உடனே, உன்னை தான் அன்னைக்கே வேணாம் என்று சொல்லிவிட்டேனே என்று சொன்னார். உங்கள் படத்தில் நடிக்க விரும்புகிறேன் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று சொன்னேன். சரி என்று பாரதிராஜா சாரும் நடிக்க வைத்தார். அந்த தாஜ்மஹால் படம் எனக்கு ஒரு நல்ல அறிமுகத்தை மக்கள் மத்தியில் கொடுத்தது. அதற்கு பிறகு அஜித் சார் உடன் உல்லாசம் படத்தில் நடித்தேன். அந்த படம் மூலமாகவும் அஜித் சாரின் நட்பு கிடைத்தது. மச்சின்னு தான் அஜித் சார் என்னை கூப்பிடுவார்.

dev updatenews360

அஜித் உடனான நட்பு:

அவரோட ஆபீஸ்க்கு எல்லாம் போய் மணிக்கணக்காக பேசி இருக்கிறேன். அமர்க்களம் படத்திற்கு பிறகு என்ன ஆச்சு என்று தெரியவில்லை அப்படியே எங்கள் இருவருடைய தொடர்பும் கட் ஆகி விட்டது. மேலும், சினிமா வாய்ப்பு குறைந்தவுடன் நான் சீரியல் பக்கம் வந்து விட்டேன். சித்தி சீரியல் எனக்கான ஒரு அடையாளத்தை சின்னத்திரையில் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. நான் கதாநாயகனாக பத்து சீரியலில் நடித்திருக்கிறேன். இருந்தாலும், எனக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் தான் மக்கள் மத்தியில் பிரபலத்தை கொடுத்தது. அதனால் அதிலேயே கவனம் செலுத்தலாம் என்று நடித்து வருகிறேன். இடையில் ஒரு மூணு வருடம் எதுவும் இல்லாமல் வீட்டில் சும்மாதான் இருந்தேன்.

சீரியல் வாய்ப்பு:

என்னை பார்த்து பலருமே இவன் காலி, இவன் இனிமேல் எங்க மீடியாவுக்கு வரப்போறான் என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். ஆனால், என்னுடைய குடும்பத்தினால் தான் நான் மீண்டும் தற்போது வந்திருக்கிறேன். பந்தம் சீரியல் மூலம் தான் நான் மீண்டும் சின்னத்திரையில் கம்பேக் கொடுத்தேன். தொடர்ந்து சீரியலில் வரும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு வருகிறேன். தற்போது ரோஜா சீரியலில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். அதே போல் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இனி தொடர்ந்து படங்கள், சீரியல் என்று நடித்து மக்களை என்டர்டைன்மென்ட் செய்வேன் என்று கூறியிருந்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!