செங்கல்பட்டு அரசு மருத்துவமனை தாய் சேய் பிரிவில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை : குழந்தைகளுடன் பதறியடித்து ஓடிய தாய்மார்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2021, 4:40 pm
chengalpet Hosp -Updatenews360
Quick Share

செங்கல்பட்டு அரசு தாய் சேய் மருத்துவமனையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் சராசரியாக, 8000 பேர் சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்களில், 1000 பேர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர். உள்நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வேளையில் குணமடைந்து வீட்டுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

இதனால் மருத்துவமனை வளாகத்தில் கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தாய் சேய் குழந்தைகள் பிரவில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள நிலையில் நேற்று இரவு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் இருக்கும் பகுதியின் மேற்கூரையில் ஒரு பகுதி பெயர்ந்து தரையில் விழுந்து உள்ளது.

நல்வாய்ப்பாக குழந்தையின் மீது ஒரு கல் கூட விழவில்லை. மேற்கூரை பெயர்ந்து விழுந்ததை பார்த்த பெற்றோர்கள் பதறி அடித்துக்கொண்டு அங்கிருந்த குழந்தைகளை தூக்கிக் கொண்டு மற்றொரு வார்டுக்கு சென்று விட்டார்கள்.

ஏற்கனவே அந்த பகுதியில் உள்ள மேற்கூரை முழுவதுமாக பெயர்ந்து உள்ளதை சீர் செய்யாமல் தர்மாகோல் சீட்டை வைத்து மறைத்து வைத்திருக்கிறார்கள். தற்போது தர்மாகோல் சீட் உடைத்துக்கொண்டு மேற்கூரையின் ஒரு பகுதி தரையில் விழுந்தது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முதல்வரை தொடர்பு கொண்டு கேட்கும் பொழுது, இச்சம்பவம் பேரதிர்ச்சியாக உள்ளது என்றும் உடனடியாக பொதுப்பணித்துறை கட்டிடம் பிரிவின் அதிகாரிகளை தொடர்புகொண்டு கட்டுமான பணி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

Views: - 256

0

0