தனியார் தங்கும் விடுதியில் கொள்ளையடித்த ரூம் பாய் கைது

28 October 2020, 10:33 pm
Quick Share

ஈரோடு: தனியார் தங்கும் விடுதியிலிருந்து 5 லட்சம் மதிப்பிலான கார் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்த ரூம் பாயை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தை சேர்ந்த சரவண மாணிக்கம் என்பவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் உறவினரை பார்ப்பதற்காக ஈரோடு மேட்டூர் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் தங்கும் விடுதியில் பணியாற்றி வந்த ரூம்பாய் ரமேஷ் என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தில், தனது 5லட்சம் மதிப்புள்ள காரில் ஏடிஎம்-ல் பணம் எடுத்து அறைக்கு சென்று பிறகு தனது கார் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் திருட்டு போனதை அறிந்துள்ளார்.

இதனையடுத்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர் ரூம் பாய் ரமேஷை கைது செய்து அவரிடமிருந்து கார் மற்றும் 5ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Views: - 13

0

0