சாலையை கடக்க வந்தவர் மீது வேரோடு சாயந்த மரம் : உயிர் பலி வாங்கிய காட்சி!!

26 November 2020, 4:01 pm
Tree Acident - Updatenews360
Quick Share

சென்னை : திருவல்லிக்கேணி அருகே வேரோடு மரம் சாய்ந்து வழிபோக்கர் மீது விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிவர் புயல் காரணமாக சென்னை உட்பட பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் முழுவதும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது.

இந்த நிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் மரம் ஒன்று முறிந்து விழுந்து 50 வயது மதிக்கத்தக்க நபர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பலத்த சூறைக்காற்று காரணமாக சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டாக்டர் பெசன்ட் சாலையில் மரம் முறிந்து விழுந்ததாகவும் ,அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் மீது மரம் விழுந்துள்ளது.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது செல்லும் வழியிலே உயிரிந்தார். உயிரழந்தவர் யார் என்பது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து சாலைகளில் அருந்து கிடக்கும் மின்கம்பங்களை தொட வேண்டாம் என்றும் , வாகனங்களை மரங்களின் கீழ் நிறுத்த வேண்டாம் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

https://youtu.be/MHbdm5rXUs8

Views: - 0

0

0