பேக்கரியில் ‘ஓசி’ கேட்டு ரவுடிகள் அட்டகாசம்.. தட்டி கேட்டவருக்கு அரிவாள் வெட்டு!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2025, 6:13 pm

வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே பிரதர்ஸ் பேக்கரியில் நேற்று இரவு வந்த இரண்டு இளைஞர்கள் பேக்கரியில் ஓசியில் பொருட்கள் கேட்டுள்ளனர் இதனை பேக்கரியில் இருந்த உரிமையாளர் நந்தகுமார் ஓசியில் தர முடியாது என மறுத்துள்ளார்

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் கடையில் இருந்த பொருட்களை தூக்கி தரையில் வீசியதுடன் இனிமேல் இங்கு கடை நடத்தினால் உங்களை கொன்று விடுவேன் என மிரட்டல் கொடுத்தார்.

இதனை அடுத்து அருகில் இருந்தவர் அந்த இரண்டு இளைஞர்களிடமும் ஏன் பொருட்களை தூக்கி தரையில் வீசியினர்கள் என தட்டி கேட்டதற்கு மறைத்து வைத்திருந்த அறிவாளால் சரமாரியாக விரட்ட தொடங்கினர்

இதனால் கையில் பலத்த வெட்டு காயத்துடன் இளைஞர்களிடமிருந்து தப்பித்த பக்கத்து கடைக்காரர் ஆபத்தான நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

Rowdies make a fuss at the bakery

இந்த நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்து செவ்வாய்பேட்டை காவல் நிலைய போலீசார் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டதில் கடையில் ஓசி பொருட்களை கேட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த அருண் மற்றும் கோபால் என்பதும் இவர்கள் இருவரின் மீதும் ஏற்கனவே இரண்டு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவை உள்ளது. தெரியவந்தது

உடனடியாக விசாரணையை தீவிர படுத்திய போலீசார் அந்த இரண்டு நபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஓசி பொருட்கள் கேட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டதுடன் தட்டிக்கேட்ட நபரை கத்தியால் வெட்டிய சம்பவம் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வேப்பம்பட்டு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!