குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தப்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கிய ரவுடிகள் : மதுரையில் பரபரப்பு!!

Author: Udayachandran
5 October 2020, 12:09 pm
Vehicles Smash - updatenews360
Quick Share

மதுரை : திடீர் நகர் பகுதியில் இரவில் குடியிருப்பு பகுதியில் இருக்கக்கூடிய இருசக்கர வாகனங்கள் மூன்று சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள திடீர் நகர் பகுதியில் ரவுடி கும்பல்கள் அப்பகுதியில் குடியிருப்புவாசிகள் வைத்திருக்கும் இருசக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகனங்களை நள்ளிரவில் அடித்து நொறுக்கப்பட்டது.

இதை கண்டித்து சாலை மறியல் செய்த அப்பகுதி மக்கள், தொடர்ந்து பலமுறை இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று இருசக்கர வாகனங்கள் ஆட்டோக்கள் சுமார் 10க்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்கள் சேதப்படுத்திய நஷ்ட ஈடு வழங்க வலியுறுத்தியும் மதுரை பெரியார் பேருந்து நிலையம் முன்பு சுமார் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்

Views: - 63

0

0