ரூ.1 கோடி மதிப்பில் பிரம்மாண்ட விமான செட்டில் நடந்த சண்டைக்காட்சி : டூப் போடாமல் நடித்து பட்டையை கிளப்பிய பிரபல நடிகர்!!

Author: Rajesh
21 April 2022, 1:54 pm
Quick Share

விரைவில் வெளியாக இருக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’ படத்திற்காக ரூ. 1 கோடி ரூபாய் மதிப்பில் விமான செட் அமைக்கப்பட்டு சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஜெய் நடிப்பில் சமீபத்தில் ‘வீரபாண்டியபுரம்’ வெளியானது. அதனைத்தொடர்ந்து, மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் நடித்த ‘குற்றம் குற்றமே’ தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போதே ஜெய் இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் ‘பிரேக்கிங் நியூஸ்’ படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருக்கடல் உதயம் தயாரித்துள்ள இப்படத்திற்கு விஷால் பீட்டர் இசையமைத்துள்ளார்.

ஜானி லால் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். ஜெய்யுடன் பானுஸ்ரீ, பானு ரெட்டி, பிக் பாஸ் சினேகன், ராகுல் தேவ், தேவ் கில், ஜெயபிரகாஷ், சந்தான பாரதி, பழ.கருப்பையா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்காக ரூ.1 கோடி மதிப்பில் கார்கோ விமான செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறது படக்குழு. இதுகுறித்து இயக்குநர் பேசும்போது, ‘சரக்கு விமானத்தில் காட்சி நடைபெறுவதாக திட்டமிட்டிருந்ததால், சண்டைக்காட்சிகள் எடுக்க மிக சவாலாக இருந்தது.

ஜெய் மிக அர்ப்பணிப்புடன் அவருடைய ஆக்‌ஷன் காட்சிகளை, டூப் பயன்படுத்தாமல் நடித்தார். அதனால், காட்சிகளை மிக விரைவாக, எளிதாக படமாக்க முடிந்தது’ என்று கூறினார்.

Views: - 467

0

0