‘உங்க வீட்ல செய்வினை இருக்கு’…ஆன்லைனில் ரூ.12 லட்சம் சுருட்டிய கும்பல்: கம்பி எண்ணும் போலி ஜோசியர்..!!

Author: Rajesh
6 April 2022, 3:35 pm

அரியலூர்: செய்வினைக்கு மாந்திரீகம் செய்வதாக ஆன்லைன் மூலம் பணமோசடி செய்த வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

அரியலூரை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு செய்வினை வைக்கப்பட்டுள்ளது என மொபைலுக்கு வந்த அழைப்பை நம்பி ரூ.12 லட்சத்தை இழந்து விட்டதாக அரியலூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் அரியலூர் சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் இவ்வழக்கு குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருவள்ளுவர் மாவட்டம் செங்குன்றம் பகுதியை சேர்ந்த வல்லவராஜ்,, கிருஷ்ணன் என்கிற தர்மராஜ், சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த குமார் ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சேலம் மாவட்டம் எருமபாளையம் பேருந்து நிலையத்தில் அங்கு வரும் பொதுமக்களிடம் கைரேகை பார்ப்பதாக கூறி கைரேகை பார்த்தவுடன் தங்களுக்கு தோஷம், செய்வினை உள்ளதாகவும் கூறி அவர்களிடம் மொபைல் நம்பரை வாங்கி மோசடியில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, அந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததில் மூன்று நபர்களும் தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டு பரிகாரம் செய்யவில்லை என்றால் தங்கள் வீட்டில் அசம்பாவிதங்கள் நடைபெறும் எனவும் அச்சுறுத்தி வந்துள்ளனர்.

விஜயகுமாருக்கு பில்லி சூனியம் இருப்பதாக கூறி கொல்லிமலை சென்று பரிகாரம் செய்ய வேண்டும் எனவும் அதற்கான தொகையை தனது வங்கி கணக்கில் அனுப்புமாறும் கூறி வங்கியின் மூலமாகவும் நேரடியாகவும் இதுவரை 12 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து மூவரையும் கைது செய்த சைபர் க்ரைம் காவல்துறையினர் மூவரிடம் இருந்தும் 6,30,000/- ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள், கார், இருசக்கர வாகனங்கள் மற்றும் நகையை பறிமுதல் செய்து. குற்றவாளிகள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?