நிவர் புயல் பாதிப்பு ரூ.400 கோடி : அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை!!
27 November 2020, 11:12 amநிவர் புயலால் ரூ.400 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
நிவர் புயல் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை தொடர்ந்து பெய்தது. இந்த நிலையில் புதுச்சேரியில் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து அமைச்சர்களுடன் புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் நாராயணசாமி ஆலோனை மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் புயல் பாதிப்பு காரணமாக ரூ.400 கோடி சேதம் ஏற்பட்டுள்தாகவும் உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை என கூறினார்.
புயல் பாதிப்பு கணக்கீட்டின்படி,820 ஹெக்டர் காய்கறி தோட்டங்களும், 170 ஹெக்டர் கரும்பு, 7 ஹெக்ட்ர் வெற்றிலை, 50 ஹெக்டர் வாழை தோட்டங்கள் சேதமடைந்திருப்பதாக கூறினார். புயல் பாதிப்பால் புதுச்சேரி பகுதியில் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்ட நிலையில் இன்று காலை 11 மணி முதல் சரி செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் தெரிவித்தார்.
0
0