தமிழகத்தில் இதுவரை ரூ.428.46 கோடி பணம் பறிமுதல் : தலைமை தேர்தல் அதிகாரி…

5 April 2021, 8:13 am
Sathya Pratha Sahoo -Updatenews360
Quick Share

தமிழகத்தில் இதுவரை 428 கோடி ரூபாய் மதிப்பு ரொக்கம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளன. இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதையடுத்து வாகன சோதனைகளை தீவிரப்படுத்தியதில் உரிய ஆவணம் இல்லாத பணம், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனிடையே நேற்றுடன் பிரச்சாரம் ஓய்வு பெற்ற நிலையில், இதுவரை தமிழகத்தில் 128 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் பெருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தேர்தல் விதிமீறல் குறித்து புகார் அளிக்க 1950 என்ற எண்ணில் மாவட்ட அளவிலான தேர்தல் அலுவலர்களையும் 1800 4252 1950 என்ற எண்ணில் மாநில தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சி விஜில் செல்போன் செயலி மூலம் புகார்களை தெரிவிக்கலாம் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Views: - 21

0

0