‘மெர்சல் பாணியில் சிகிச்சை’ – ஏழைகளுக்காக சேவையாறிய மருத்துவர் உயிரிழப்பால் மக்கள் சோகம்..!

16 August 2020, 1:04 pm
Quick Share

வடசென்னையில் 5 ரூபாய் டாக்டர் உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் வேதனையடைந்துள்ளனர்.

கடந்த சில வருடங்களாக மருத்தவத்துறை தொழில் மயமாக மாறிவிட்டது. பணம் மற்றும் வசதி அடிப்படையில் சிகிச்சையும் தரம் பார்க்கப்பட்டது. ஏழைகளுக்கான சாதாரன சிகிச்சை ஆரம்ப கட்டணம் கூட ஒரு நாள் கூலியை மிஞ்சும் அளவுக்கு இருந்து வருகிறது.

இதனால், தரமான சிகிச்சைக்கு வழியின்றி ஏராளமான ஏழைகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகும் அவல நிலையும் சமூகத்தில் விதைக்கப்பட்டு விட்டது.

இதுபோன்ற நேயமற்ற நிலைக்கு மத்தியில் வடசென்னையை சேர்ந்த மருத்துவர் திருவெங்கடம் ரூ.5 மட்டும் வாங்கிக்கொண்டு ஏழைகளுக்கு சிகிச்சை வழங்கி வந்துள்ளார்.

அரசு மருத்துவராக பணியாற்றிய இவர், தனக்கான ஓய்வு நேரங்களில் அயராது ஏழைகளுக்கு சிகிச்சை வழங்கியுள்ளார்.

இவரிடம், சிகிச்சைக்கு செல்பவர்கள் ஏழையாக இருந்தாலும் சரி, வசதி படைத்தவர்களாக இருந்தாலும் சரி, இவர் வாங்கும் மருத்துவ கட்டணம் வெறும் 5 ரூபாய்தான்.

இந்த நிலையில், அவர் நேற்று மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இவரின் இழப்பு வடசென்னை மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவரை பற்றி அங்கிருந்த மக்கள் கூறுகையில், குறைந்த செலவில் தரமான மருத்துவம் வழங்க மருத்துவமனை கட்ட வேண்டும் என்பதே இவரின் கனவாக இருந்தது என பலரும் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.

இதுபோன்று ஏழைகளுக்காக வாழ்ந்த மருத்துவர் திருவெங்கடத்தை அப்பகுதி மக்கள் கடவுளாகவே பார்கின்றனர்.

Views: - 110

0

0