50 சென்ட் இடத்தை பதிவு செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சம் : கையும் களவுமாக சிக்கிய பதிவாளர்!!

16 April 2021, 10:41 am
Registar Bribery -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : நாகர்கோவில் அருகே 50 சென்ட் இடத்தை பத்திரப்பதிவு செய்ய 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஆத்திக் காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் தனக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தை கிரையம் செய்து கொடுப்பதற்காக பத்திரப்பதிவு செய்ய கணபதிபுரத்தில் உள்ள ராஜாக்கமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றார்.

அப்போது அந்த பத்திரப்பதிவை மேற்கொள்ள 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வேண்டும் என சார் பதிவாளர் பனிமலர் ஜெசிங்டன் கூறியதாக தெரிகிறது. இதனை அடுத்து கிருஷ்ணன் நாகர்கோவிலில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயணம் தடவிய பணத்தை கிருஷ்ணனிடம் அளித்து பதிவாளருக்கு கொடுக்க கூறினர். அவ்வாறே பணம் கொடுக்கும்போது மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 11

0

0