கோவையில் காதி கிராப்ட்டில் ரூ.6 லட்சம் மதிப்பிலான சேலைகள் திருட்டு : போலீஸ் விசாரணை!!

Author: Udayachandran
31 July 2021, 3:39 pm
Khadi Kraft Theft - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் தமிழக அரசுக்கு சொந்தமான காதிகிராப்ட்டில் நள்ளிரவில் கொள்ளையர்கள் புகுந்து 6 லட்சம் மதிப்பிலான சேலைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை உப்பிலிபாளையம் அவிநாசி மேம்பாலத்திற்கு கீழ்பகுதியில் காதிகிராப்ட் என்ற அரசு விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது. இன்று அங்கு பணியாற்றக்கூடிய ஊழியர்கள் வழக்கம் போல வேலைக்கு வந்தனர். அப்பொழுது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது சேலைகள் அலங்கோலமாக கிடந்தது.

இதுகுறித்து அவர்கள் ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்தனர். அப்போது ரூ. 6 லட்சம் மதிப்பிலான சேலைகள் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Views: - 199

0

0